Thursday, January 23, 2025
HomeLatest Newsரஷ்யாவை திணற வைத்த உக்ரைன்..!பீதியில் புடின்..!

ரஷ்யாவை திணற வைத்த உக்ரைன்..!பீதியில் புடின்..!

உக்ரைன் – ரஷ்யா போரானது தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

இப்போர் ஓர் ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இதில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் போன்றன ஆயுத உதவிகளை செய்து வருவதால் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்கரைன் இராணுவம் எதிர்த்து போராடி வருகின்றது.

அத்ததுடன், ரஷ்யா வீசும் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தி வருகின்றது. மேலும் ரஷ்ய எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன.

இதனிடையே நேற்றைய தினம் மாஸ்கோவிற்கு வட மேற்கு பகுதியில் உள்ள எண்ணெய் குழாய் வெடித்து சிதறியுள்ளது.

இதனால், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிகளுக்கு ரஷ்ய இராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துமாறு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டார்.

இதனை ரஷ்யாவின் எல்லை காவலர் தின வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News