Tuesday, May 13, 2025
HomeLatest NewsWorld Newsரஷ்யாவின் 2 அதிநவீன போர் கப்பல்களை தாக்கிய உக்ரைன்..!

ரஷ்யாவின் 2 அதிநவீன போர் கப்பல்களை தாக்கிய உக்ரைன்..!

ரஷ்யாவின் இரண்டு வாசிலி பைகோவ் ரக ராணுவ கப்பல் மீது உக்ரைனிய ஆயுதப்படைகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் நாளுக்கு நாள் நீடித்து கொண்டே வருகிறது.


இந்நிலையில் இன்று காலை ரஷ்யாவுக்கு சொந்தமான வாசிலி பைகோவ் ரக
ராணுவ போர் கப்பல் மீது உக்ரைனிய ஆயுதப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதில் 2 வாசிலி பைகோவ் ரக ராணுவ போர் கப்பலும் பலத்த சேதமடைந்தது இருப்பதாக
உக்ரைனிய விமானப்படையின் முலோபாய கட்டளை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ரஷ்யாவின் இரண்டு வாசிலி பைகோவ் ரக ராணுவ போர் கப்பல்களை
மறைமுகமாக உக்ரைன் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில் உக்ரைனின் கடல்சார் ட்ரோன்கள் வாசிலி பைகோவ் ரக ராணுவ போர் மீது தாக்குதல் நடத்த முன்னேறுவதும்,
போர் கப்பல்கள் எதிர்ப்பு தாக்குதல் நடத்துவதும் பார்க்க முடிகிறது.

Recent News