Tuesday, December 24, 2024
HomeLatest Newsநோட்டோவின் புதிய உறுப்பினராக உக்ரைன் - ஒப்புதல் வழங்கிய கூட்டணி நாடுகள்..!

நோட்டோவின் புதிய உறுப்பினராக உக்ரைன் – ஒப்புதல் வழங்கிய கூட்டணி நாடுகள்..!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டினை சேர்த்துக் கொள்ள அதன் அனைத்து இராணுவக் கூட்டணி உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்ய போரானது ஓராண்டுகளை கடந்து இடம்பெற்று வரும் நிலையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தில் உக்ரைனிற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவளித்து வருவதுடன் அந்நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக கடும் பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் திடீர் பயணம் மேற்கொண்டதுடன் அங்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அப்போது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யாவிற்கு எதிராக நாடு மேலோங்குவதை உறுதி செய்வதிலே தற்சமயம் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

அதற்கு ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், நேட்டோவில் உக்ரைன் இணைய அதன் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பேசிய அவர், வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் உக்ரைன் நேட்டோவில் சேர அனைத்து இராணுவக் கூட்டணி உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் ஆகையால், ஜூலையில் இடம்பெறவுள்ள அடுத்த நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவதற்கு ஜெலென்ஸ்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Recent News