Thursday, January 23, 2025
HomeLatest Newsசிறுமியை வைத்தியசாலையில் சேர்த்துவிட்டு தப்பி ஓடிய இரு இளைஞர்கள் - சிறுமி உயிரிழப்பு

சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்துவிட்டு தப்பி ஓடிய இரு இளைஞர்கள் – சிறுமி உயிரிழப்பு

இரண்டு இளைஞர்களால் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட   சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்த  இருவரும் நொடிப்பொழுதில் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட சிறுமி உடனடியாக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நோயாளியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், சுமார் 15 வயதுடைய சிறுமியின் முகத்திலும் உடலிலும் காயங்கள் காணப்படுவதாகவும், அவை தாக்குதலால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது.

  வைத்தியசாலை வளாகத்தின் பாதுகாப்பு கமரா மூலம்,இளைஞர்கள் வந்த  கார் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Recent News