Tuesday, February 25, 2025
HomeLatest Newsஇத்தாலியில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.

இத்தாலியில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.

இத்தாலியின் போலோக்னா நகரில் இருந்து ரிமினி என்ற இடத்துக்கு தொடருந்து ஒன்று புறப்பட்டு சென்ற போது அங்குள்ள பென்சா-போர்லி பகுதிகளுக்கு இடையே அதே தண்டவாளத்தில் மற்றொரு தொடருந்தும் வந்து கொண்டிருந்தது.

இதை அறிந்த தொடருந்து இயக்குநர்கள் உடனடியாக தொடருந்தை நிறுத்த முயன்றபோதிலும் இரு தொடருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 17 பேர் படுகாயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் சில தொடருந்து பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதால் பயணிகள் பலர் காயம் அடைந்தனர். இதனையடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது தொடருந்துக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 17 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தொடருந்து விபத்து குறித்து தொடருந்து திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் முதல்கட்ட விசாரணையில் சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

Recent News