Tuesday, December 24, 2024
HomeLatest Newsமெட்டா நிறுவனத்தால் பணி நீக்கப்பட்ட இந்தியாவின் முக்கிய இரு நிர்வாக அதிகாரிகள்....!

மெட்டா நிறுவனத்தால் பணி நீக்கப்பட்ட இந்தியாவின் முக்கிய இரு நிர்வாக அதிகாரிகள்….!

உலகலாவிய பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்களான அமேசான் , மெட்டா , ட்விட்டர் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் கடந்த வருடம் முதல் தமது நிறுவன ஊழியர்களை ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வகையில் மெட்டா நிறுவனம் தனது இறுதிக்கட்ட பணி நீக்க நடவடிக்கையின் பொருட்டு சந்தைப்படுத்தல் , தளப் பாதுகாப்பு , நிறுவனப் பொறியியல் , நிரல் மேலாண்மை உட்பட்ட குழுக்களில் பணிபுரிந்த 10000 பேரை கடந்த மார்ச் மாதம் ஒரு பகுதியாக பணி நீக்கம் செய்தது.

இப் பணிநீக்கத்தில் சந்தைப்படுத்தல் பிரிவு இயக்குனர் அவினாஷ் பந்த் மற்றும் இயக்குனர் மற்றும் ஊடக பங்குடமைகளின் தலைவரான சாகேத் ஜா சௌரப் ஆகிய இந்தியாவின் முக்கிய இரு நிர்வாகிகளும் பணி நீக்கத்திற்குட்பட்டுள்ளனர்.

இந் நிறுவனமானது இவ் ஆண்டு ஆரம்பத்தில் 11000 க்கு மேற்பட்ட ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியது. இதனையடுத்து 2 ம் கட்ட.பணிநீக்கத்தை அறிவித்த அறிவித்த முதல் பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக மெட்டா காணப்பட்டது.

இதேவேளை 2020 ம் ஆண்டு தனது நிறுவன ஊழியர்களை இரு மடங்காக்கியதைத் தொடர்ந்து 2021 ம் ஆண்டிலிருந்து குறித்த நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News