கிரீன்லாந்தில் 2 மில்லியன் ஆண்டுகள் பழைமையான மரபணு மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலகின் ஆகப் பழைமையான மரபணு மாதிரிகள் இவையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Ice Age என்று அழைக்கப்படும் பனியுகத்தின் போது வாழ்ந்த உயிரினங்கள் குறித்து மேலும் அறிய அவை தடயமாக விளங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பனியில் உறைந்திருந்த படிமங்களில் இருந்த 41 மரபணு மாதிரிகளும் சிறப்பான நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன் கிடைத்த ஆகப் பழைமையான மரபணு மாதிரி Mammoth எனும் யானை வகைக்குச் சொந்தமானது.
அது ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.