Tuesday, December 24, 2024
HomeLatest Newsகனடாவில் திருமண வரவேற்பு நிகழ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி…..!

கனடாவில் திருமண வரவேற்பு நிகழ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி…..!

கனடாவின் தலைநகரான ஒட்டாவா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இன்பினிட்டி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புகுந்த கும்பலொன்று துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் டொரண்டோவைச் சேர்ந்த 26 வயதான சைபத் மொஹமது அலி மற்றும் 36 வயதான அப்திஷாகுர் அப்தி தாஹிர் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகினர்.

இதேவேளை 6 பேர் காயமடைந்துள்ள நிலையி் வைத்தியசாலையி்ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு்க்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Recent News