Thursday, December 26, 2024
HomeLatest Newsஇரு முக்கிய அமைச்சுக்கள் ரணிலின் கைகளில்!

இரு முக்கிய அமைச்சுக்கள் ரணிலின் கைகளில்!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நாடாளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மூலம் தெரிவான ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.

இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்திருந்த நிலையில், பகல் 1 மணியளவில் 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

மேலும், முக்கிய அமைச்சுக்களாக குறிப்பிடும் போது கல்வி, சுகாதாரம், நீதி, வெளிவிவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு போன்ற அமைச்சுப் பதவிகளுக்கு இன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் நிதி அமைச்சு இன்றைய தினம் எவருக்கும் வழங்கப்படாத நிலையில் பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய இரு முக்கிய அமைச்சுக்களும் ஜனாதிபதியின் கைகளிலேயே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent News