Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsமெக்ஸிகோவில் இரு ஆஸ்திரேலியர்கள் மாயம்: மூவர் கைது!

மெக்ஸிகோவில் இரு ஆஸ்திரேலியர்கள் மாயம்: மூவர் கைது!

ஆஸ்திரேலிய சகோதரர்கள் இருவர் மெக்ஸிகோவில் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் அந்நாட்டு பொலிஸார், மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.ஆஸ்திரேலியாவில் பேர்த்தை சேர்ந்த Jake , Callum Robinson ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

மெக்ஸிகோவின் வடமேற்கில் உள்ள Baja California பகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர்கள், Rosarito நகரில் உள்ள தங்கிமிடத்துக்கு மீண்டும் திரும்பவில்லை. அமெரிக்கர் ஒருவருடனேயே சென்றுள்ளனர்.அவரையும் காணவில்லை.Ensenada நகருக்கு தெற்கே உள்ள பண்ணையொன்றில் எரிந்த நிலையில் அவர்களது கார் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் 23 வயது பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சும் உரிய தலையீடுகளை மேற்கொண்டுள்ளது.

Recent News