Friday, November 22, 2024
HomeLatest Newsகழிவறை டிஷ்யூ பேப்பரை கையோடு கொண்டு செல்லும் டுவிட்டர் பணியாளர்கள்!

கழிவறை டிஷ்யூ பேப்பரை கையோடு கொண்டு செல்லும் டுவிட்டர் பணியாளர்கள்!

எலான் மஸ்க்கின்(Elon Musk) சிக்கன நடவடிக்கை எதிரொலியாக, டுவிட்டர் பணியாளர்கள் கழிவறை டிஷ்யூ பேப்பரை கையோடு கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது.

உலக கோடீசுவரர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு சமீபத்தில் சென்றார் எலான் மஸ்க்(Elon Musk).

கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு நிறுவனங்கள் இரண்டாண்டுகளாக முடங்கிய சூழலில், மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன.

இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் பல சிக்கன நடவடிக்கைகளை மஸ்க்(Elon Musk) மேற்கொண்டு வருகிறார். கடந்த அக்டோபரில், உலகின் மிக பிரபல சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார் மஸ்க்.

இதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளையும் மஸ்க் மேற்கொண்டார். நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சூழலில், நிறுவனத்தில் பணியாற்ற கூடிய, கட்டிடங்களை தூய்மை செய்து, பராமரிக்கும் வேலையில் ஈடுபட்ட ஊழியர்களில் பலர் சான்பிரான்சிஸ்கோ நகரில், தங்களுக்கு அதிகளவில் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, அவர்களை வேலையை விட்டு நீக்கும் உத்தரவை மஸ்க் எடுத்துள்ளார். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால், நிறுவன பணியாளர்கள் மிரண்டு போயுள்ளனர்.

டுவிட்டரில் சிக்கன நடவடிக்கை எதிரொலியாக, நிறுவன பணியாளர்கள் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும்போது, தங்களுடன் கழிவறைக்கு செல்வதற்கு தேவையான டிஷ்யூ பேப்பரையும் உடன் கொண்டு செல்கின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது.

Recent News