Tuesday, January 28, 2025
HomeLatest Newsகொழும்பு அரசியலில் திருப்புமுனை:ஆட்டத்தை ஆரம்பித்த மைத்திரி!

கொழும்பு அரசியலில் திருப்புமுனை:ஆட்டத்தை ஆரம்பித்த மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட எம்.பி.க்களை கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்படுவதற்கு சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக அவர்களை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்து கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதுடன், இவ்விடயம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

Recent News