Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsகாஸாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பொறுப்பேற்கும் துருக்கி…!

காஸாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பொறுப்பேற்கும் துருக்கி…!

துருக்கியின் சுகாதார அமைச்சர் Fahrettin Koca காசாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தனது இஸ்ரேலிய பிரதிநிதி யூரியல் மெனசெம் புஸோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய கோகா, காசாவில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் ஒரே ஒரு மருத்துவமனையும் இனி செயற்படாது . அப்பாவி குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியத்தை நான் அவருக்கு நினைவூட்டினேன்,” என்று கூறினார்.

“பாதிக்கப்பட்டவர்களை, குறிப்பாக குழந்தைகளை, ஆம்புலன்ஸ்கள் மூலம் எகிப்துக்கு அழைத்துச் செல்லவும், பின்னர் விமான ஆம்புலன்ஸ் மூலம் துருக்கிக்கு அழைத்துச் செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை நான் வலியுறுத்தினேன்.

கூடிய விரைவில் புற்றுநோயாளிகளை துருக்கிக்கு கொண்டு செல்வோம் என்று துருக்கியின் சுகாதார அமைச்சர் Fahrettin Koca உறுதியளித்துள்ளார்.

Recent News