Thursday, May 9, 2024
HomeLatest NewsWorld News17ம் நூற்றாண்டில் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க முயற்சி - உள்ளே எவ்வளவு தங்கம் ???

17ம் நூற்றாண்டில் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க முயற்சி – உள்ளே எவ்வளவு தங்கம் ???

உலக அளவில் கடலுக்கு அடியில் நம்மால் நினைத்து பார்க்கமுடியாத அளவில் தங்கம் புதைந்து கிடப்பதாக பல்வேறு ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.அந்த வகையில் சுமார் 4 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பொக்கிஷங்களை ஏற்றிச் சென்ற 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேயக் கப்பலான Merchant Royalன் சிதைவுகளை பல நூற்றாண்டுகளாகத் தேடியும் அதை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் இப்போது, ​​புதிய தொழில்நுட்பம் கொண்டுள்ள ஒரு UK நிறுவனம், அதை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகின்றனர். “எல் டோராடோ ஆஃப் தி சீஸ்” என்று அழைக்கப்படும் மெர்ச்சன்ட் ராயல், வெளியான சில ஆய்வின் முடிவுகளின்படி, கார்ன்வால் கடற்கரையில் கடந்த 1641ல் மூழ்கியது குறிப்பிடத்தக்கது

அதாவது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் அது மூழ்கியுள்ளது. கடலில் மூழ்கிய அந்த கப்பல் பல பில்லியன் கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளியை எடுத்துச் சென்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இன்றிய தேதியில் 1 பவுண்ட் என்பதன் இந்திய மதிப்பு சுமார் 105 ரூபாய். இந்நிலையில் மல்டிபீம் சர்வீசஸ் என்ற, தொலைந்து போன இடிபாடுகளைக் கண்டுபிடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஒன்று, இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் ஆங்கிலக் கால்வாயின் 200 சதுர மைல் பகுதியில் தேடும் பணிகளில் ஈடுபாவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

அதாவது, அதை கண்டுபிடித்தல் கிடைக்கும் வெகுமதி மகத்தானதாக இருந்தாலும், அந்த நிறுவனத்தின் தலைவர் நைகல் ஹோட்ஜ் கூற்றுப்படி, இதை கண்டுபிடிப்பது ஒரு வரலாற்று சாதனையாக தான் கருதுவதாக கூறியுள்ளார். இங்கே கண்டுபிடிக்கப்பட்ட புதையல்கள் பாரம்பரிய கலைப்பொருட்களாக கருதப்படும் என்கிறார் அவர்.

கப்பல் மூழ்கிய இடத்தில் ஆபத்தான நீர்நிலைகள் இருப்பதால் தேடுதல் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில் இந்த கப்பலை போல “ஆயிரக்கணக்கான கப்பல் கடலின் ஆழத்தில் உள்ளன, “எனவே, நாம் அவற்றைச் சோதனை செய்யும்போது நிறைய சிதைவுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை அடையாளம் காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Recent News