Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsவெற்றி நடை போடும் டிரம்ப் - அதிபர் பதவியில் அதிரடி முன்னேற்றம்

வெற்றி நடை போடும் டிரம்ப் – அதிபர் பதவியில் அதிரடி முன்னேற்றம்

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் புதிய அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை
தேர்ந்தெடுப்பார்கள்.

இதற்கிடையே, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தெற்கு மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவில் அவர் வெற்றி பெற்றுள்ளார்

ஏற்கனவே நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News