Thursday, January 23, 2025
HomeLatest Newsஅதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர்- நீதிமன்றம் கருத்து.

அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர்- நீதிமன்றம் கருத்து.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் தோல்வியை ஏற்க மறுத்து வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் கொலராடோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்புக்கு தகுதியில்லை என்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை டிரம்ப் எதிர்த்த நிலையில் அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் ஜனவரி 4-ஆம் தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது

மேலும் குடியரசு கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும் அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்துள்ளது.

Recent News