Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsடிரம்பால் ஜனநாயகத்திற்கே ஆபத்து"- பாராளுமன்ற உரையில் பைடன் ஆவேசம்..!

டிரம்பால் ஜனநாயகத்திற்கே ஆபத்து”- பாராளுமன்ற உரையில் பைடன் ஆவேசம்..!

நாட்டின் பொருளாதார நிலை, அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும், ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் உரை நிகழ்த்துவது வழக்கம்.இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடன், “ஸ்டேட் ஆஃப் தி யூனியன்” (State of the Union Address) எனப்படும் இந்த உரையை நிகழ்த்தினார்.தனது உரையில், முன்னாள் அமெரிக்க அதிபரும், தற்போதைய குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை, பெயர் குறிப்பிடாமல் கடுமையாக பைடன் விமர்சித்தார்.

சுமார் 1 மணி நேரம் பைடன் நிகழ்த்திய உரையில் அவர் தெரிவித்ததாவது: எனக்கு முன்பு அதிபராக இருந்தவர் மக்களுக்கான அடிப்படை கடமைகளையே ஆற்றவில்லை. தற்போது அவர் உக்ரைன் விடயத்தில் ரஷிய அதிபர் புதினிடம், “நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என கூறுகிறார்.ரஷிய அதிபரிடம் ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர் இவ்வாறு கூறலாமா? இது ஆபத்தானது.

புதின் உக்ரைனுடன் நிறுத்தி கொள்ள மாட்டார். நாம் உக்ரைனுக்கு தேவைப்படும் ஆயுத உதவி வழங்கினால் புதினை நிறுத்த முடியும். நான் புதினுக்கு அஞ்ச மாட்டேன். டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். என அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Recent News