Monday, February 24, 2025
HomeLatest Newsசிக்கலில் சிக்கியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனம் – விசாரணைக்கு அழைப்பு

சிக்கலில் சிக்கியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனம் – விசாரணைக்கு அழைப்பு

அரசுக்கு சொந்தமான லிட்ரோ லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர், சிரேஷ்ட லிட்ரோ அதிகாரிகள் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் (SLIC) பிரதிநிதிகள் ஆகியோருக்கு கோப் குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கோப் குழுவில் (COPE) எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்தில் 280,000 மெட்ரிக் டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) கொள்முதலின் போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மரிகார் கோப் குழுவிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் சர்ச்சைக்குரிய கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இதனை போது விளக்கம் கேட்கப்படும் என கோப் குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recent News