Sunday, March 9, 2025
HomeLatest Newsஎரிபொருள் பெறுவதில் சிக்கல்; தனியார் பேருந்து சேவை முடங்கும் அபாயம்!

எரிபொருள் பெறுவதில் சிக்கல்; தனியார் பேருந்து சேவை முடங்கும் அபாயம்!

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் சுமார் 4000 தனியார் பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை டிப்போவின் ஊடாக தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“நாடு முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 107 டிப்போக்கள் உள்ளன.

சில டிப்போக்களில் தனியார் பஸ்களுக்கு எரிபொருள் சரியாக கிடைப்பதில்லை. அதை முறையாக செய்யாத வரை தனியார் பஸ்கள் அனைத்தும் சேவையில் ஈடுபடுத்த முடியாது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்.

இருப்பினும் 50 சதவீத பஸ்கள் சேவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அடுத்த சில நாட்களில் பஸ்கள் சேவைக்குட்படுத்தப்பட முடியுமா என கூற முடியாது. தனியார் பஸ் சேவையை வலுப்படுத்த போக்குவரத்து அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியம்” என்றார்.

Recent News