அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முன்பாக மேலாடையின்றி சென்ற திருநங்கை வழக்கறிஞருக்கு வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரைட் மாத கொண்டாட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் நடத்தியுள்ளார்.
அந்த பிரைட் மாத கொண்டாட்ட நிகழ்வு ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஒற்றுமையைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
அந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டுள்ள நிலையில், ரோஸ் மோன்டோயா என்ற திருநங்கையும் அதில் கலந்து கொண்டுள்ளார்.
அவர், மேலாடையின்றி போஸ் கொடுக்கும் காணொளியையும் வெளியிட்டுள்ளார். அதில் ரோஸ் மோன்டோயா, அதிபர் பைடனை சந்தித்து பின்னர் அதிபருடன் கைகுலுக்கின்றார்.
அத்துடன், மோன்டோயா வெள்ளை மாளிகையின் முன் தொடர்ச்சியாக அரை நிர்வாண போஸ் கொடுப்பதும் அந்த காணொளியில் காணப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பாக அதிபர் பைடனின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் , டிரான்ஸ் வக்கீல் ரோஸ் மோன்டோயா உட்பட நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தகாத நடத்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அது தமது குடும்பங்களைக் கொண்டாட வந்த நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களை சங்கடப்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.