Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsமாஸ்கோ தாக்குதலுக்கான பயிற்சி பாகிஸ்தானில்..!

மாஸ்கோ தாக்குதலுக்கான பயிற்சி பாகிஸ்தானில்..!

ஆப்கானிஸ்தான் தலிபான் செய்தி தொடர்பாளர் அல் மிர்சாத், ஐ.எஸ். ஐ. எஸ்
இன் பிராந்திய கிளை ஒன்று பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தனது தளத்தை நிறுவியதாகவும், அங்கு பணியாளர்களுக்கு போர்க்குணமிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்றும் உள்ளூர் மற்றும் பல சர்வதேச தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.இரண்டு நாட்களுக்குப் பிறகு ஐ.எஸ். ஐ. எஸ் தீவிரவாதிகள் மாஸ்கோ மால் தாக்குதலில் 130 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றனர். மேலும் குறித்த தாக்குதலுக்கான பயிற்சியும் குறித்த தளத்தில் தான் வழங்கப்பட்டதாக அவர் மேலும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார் .

மேலும் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள்களுக்குமான பயிற்சி பாகிஸ்தானில் இடம்பெற்று இருக்கலாம் என தாம் ஊகிப்பதாக தெரிவித்துள்ளார்.குறித்த தீவிரவாத குழுவிற்கு பாகிஸ்தா ன் இடமளித்ததை அவர் மேலும் கண்டித்துள்ளார்.பாகிஸ்தான் அரசாங்கம் இதற்கு முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என அவர் மேலும் அழைப்பு விடுத்துள்ளார் .

Recent News