அமெரிக்காவில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பனி கரடியொன்று வைரலான நிலையில் இந்த கரடி ஓநாய் கடித்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கரடி நியுயோர்க்கிலுள்ள ஒரு காட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இது வரை காணபட்ட 10 இலட்சம் கரடிகளில் இதுவொரு அரியவகை கரடி. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த கரடி உயிரிழந்தது ஆய்வாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கரடி அமெரிக்காவின் மிக்சிகனில் உள்ள வனப்பகுதியொன்றில் முதன் முதலாக செப்டம்பர் 6ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. இது வெண்மை நிறத்தில் காணப்படும். இதன் கழுத்து பகுதி மட்டும் லேசான பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
உலகம் முழுவதுமே இந்த வகை கரடிகள் வெறும் 100 மட்டுமே காணப்படுகிறது என ஆராய்ச்சிகளிலிருந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து, தற்போது மிக்சிகனில் சுமார் 1 லட்சம் கரடிகள் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதில் நீங்கள் வெள்ளை கரடியை பார்ப்பது மிக மிக அரிதானவொன்றாகும்.
அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள், இந்த வெள்ளை கரடியின் வருகையை நல்ல காலத்தின் பிறப்பு என்று கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.