Saturday, January 25, 2025
HomeLatest Newsதமிழர் பகுதியில் தொடரும் சோகம்..! ஆசிரியர் பெயரை எழுதிவிட்டு உயிர் மாய்த்த மாணவன்...!

தமிழர் பகுதியில் தொடரும் சோகம்..! ஆசிரியர் பெயரை எழுதிவிட்டு உயிர் மாய்த்த மாணவன்…!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் நேற்று (11.05.2023) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

கோவிற்குளம் இந்து கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 10 இல் கல்வி பயிலும் 14வயதுடைய பாடசாலை மாணவன் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

என் சாவிற்கு காரணம் வவுனியா இந்து கல்லூரி ஆசிரியர் சுரேன் என எழுதி வைத்திருந்த கடிதமும் மாணவனின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக மாணவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மாணவனின் பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் மேலதிக விசாரணைக்காக குறித்த ஆசிரியரிடமும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recent News