Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsஒடிசாவில் தொடரும் அவலம்..!2 பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு..!வெளியான உத்தரவு..!

ஒடிசாவில் தொடரும் அவலம்..!2 பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு..!வெளியான உத்தரவு..!

பேரூந்துகள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பெர்ஹாம்பூர் தப்டபானி சாலையிலுள்ள டிகாபஹன்டி பகுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

திருமண விழாவிற்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பேரூந்து, வேறு ஒரு பயணிகள் பேரூந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதையடுத்து, காயமடைந்தவர்களை எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் டிகாபஹன்டி மருத்துவமனைகள் போன்றவற்றில் அனுமதித்துள்ளனர்.

அதன் பின்னர், பலத்த காயமடைந்த இருவர் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, குறித்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.30 ஆயிரம் ரூபாயினை நிவாரணமாக வழங்குவதற்கு சிறப்பு நிவாரண ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News