Sunday, January 26, 2025
HomeLatest Newsபிள்ளைகளின் பசியை போக்க துடித்த இளம் தாய்க்கு நேர்ந்த சோகம்..!

பிள்ளைகளின் பசியை போக்க துடித்த இளம் தாய்க்கு நேர்ந்த சோகம்..!

இளம் தாயொருவர் தனது பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக முந்திரியை பறிக்க சென்ற வேளை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் புத்தளம்- பள்ளம, அடம்மன வெலிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அடம்மன, எம்.ஏ. பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ரோகினிஎன்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ரோகினியின் கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியதால் அவர்களுடைய குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வந்துள்ளது.

இந்நிலையில், இரவு வேளை உணவு தயாரித்து தனது பிள்ளைகளிற்கு கொடுப்பதற்காக தனது தோட்டத்திலுள்ள முந்திரியை பறித்து விற்பனை செய்ய திட்டமிட்டு தனது மகளுடன் சென்றுள்ளார்.

அப்பொழுது வேல் யாய ஆற்றின் ஊடாக வீட்டிற்கு அருகில் சென்றுக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கிய நிலையில் பலத்த தீ காயங்களிற்கு இலக்காகி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மகள் தாயை விட 15 மீற்றர் இடைவெளியில் முன்னால் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

தனது பிள்ளைகளின் பசியினை போக்க பாடுபட்ட இளம் தாய் உயிரிழந்த சப்மவம் பெரும் சோகக்கதை ஏற்படுத்தியுள்ளது.

Recent News