Sunday, April 20, 2025
HomeLatest Newsகோட்ட கோ கம தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டத்தில் குதிக்கவுள்ள தொழிற்சங்கங்கள்!

கோட்ட கோ கம தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டத்தில் குதிக்கவுள்ள தொழிற்சங்கங்கள்!

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் இட்மபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 39 வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலிமுகத்திடல் போராட்ட களத்தில் புகுந்த வன்முறையாளர்களால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு ஆர்ப்பாட்ட கூடாரங்கள் தீக்கிரையாக்க்பபட்டன.

இந்நிலையில் காலிமுகத்திடல் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு நீதி வழங்குமாறு கோரி தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் மாலை02 மணிக்கு கொழும்பு கோட்டை மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

Recent News