Thursday, December 26, 2024
HomeLatest Newsபொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து..!இலங்கையில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..!

பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து..!இலங்கையில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..!

பிளாஸ்டிக் பொம்மைகள் சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், பிளாஸ்டிக் பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து அந்த ஆணையத்தில் பல விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த பொம்மைகளில் பிளாஸ்டிக் மட்டுமின்றி பல்வேறு இரசாயனங்கள் அடங்கிய பல்வேறு வகையான வர்ணங்களும் பயன்படுத்தப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சரோஜனி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் உட்கொள்வதால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதால் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

Recent News