Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsகடினமான ஆங்கில போட்டி..! சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுவன்..!அமெரிக்காவில் அசத்தல்..!

கடினமான ஆங்கில போட்டி..! சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுவன்..!அமெரிக்காவில் அசத்தல்..!

ஆங்கில மொழி உச்சரிப்பு போட்டியில் இந்தியவம்சாவளி சிறுவன் ஒருவன் வெற்றி பெற்றமை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவின் பிரபலமான ஸ்பெல்லிங் பீ போட்டியிலே தேவ் ஷா அந்த 14 வயது சிறுவன் வெற்றி பெற்றுள்ளான்.

ஆங்கில மொழியின் உச்சரிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஸ்கிரிப்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் கடினமான வார்த்தைகளை மிகவும் சரியாக உச்சரிப்பவர்களிற்கு பரிசு வழங்கி வருகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட அந்த போட்டியில் புளோரிடாவின் லார்கோவில் வசித்து வரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தேவ் ஷா கலந்து கொண்டுள்ளார்.

அந்த மாணவன் இறுதி சுற்றிற்கு தேர்வான நிலையில் இறுதி சுற்றில் சாம்மோபைல் என்ற வார்த்தையை மிகவும் சரியாக உச்சரித்துள்ளார்.

அந்த வகையில் குறித்த போட்டியில் 200 போட்டியாளர்களை தேவ் ஷா எதிர்கொண்டு வெற்றியை தன்வசமாக்கியுள்ளார்.

வெற்றி பெற்ற தேவ் ஷாவை பாராட்டி இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் ரூபாயினை பரிசாக வழங்கியுள்ளனர்.

மேலும், கடந்தாண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்திய வம்சாவளி மாணவியான ஹரிணி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News