Monday, December 23, 2024
HomeLatest Newsபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் 7 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

மேலும் இந்த வாரம், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி நிவாஷினி, ராம், மகேஸ்வரி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர் என்று தான் கூற வேண்டும். இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்த நிறைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால், அமரக்களமாகவும் பிக் பாஸ் வீடு இருக்கிறது.

இந்நிலையில் கடந்த வாரம் ரசித்தா வெளியேறிய நிலையில் அடுத்ததாக யார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

 மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து முக்கிய போட்டியாளரான ஏ டி கே வெளியேறியுள்ளார்.

ஏ டி கே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி  இருப்பது  அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 

Recent News