Thursday, January 23, 2025
HomeLatest Newsகூகுளில், அதிகம் தேடப்பட்ட Top-10 விளையாட்டு நிகழ்வுகள் பட்டியல்!

கூகுளில், அதிகம் தேடப்பட்ட Top-10 விளையாட்டு நிகழ்வுகள் பட்டியல்!

கூகுளில் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப்-10 விளையாட்டு நிகழ்வுகள் குறித்த பட்டியலை கூகுல் வெளியிட்டுள்ளது. அதில் முதலிடம் நம்ம ஐ.பில எல் இடம் பெற்றுள்ளது.

கோவிட்-19 தொற்று காரணமாக ஒரு வருட கால இடைவெளிக்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டு பெரும்பாலான முக்கிய விளையாட்டுப் போட்டிகள் பழைய நிலைக்குத் திரும்பியது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல நாடுகள் விளையாட்டு போட்டிகளை நேரில் காண அரங்குகளுக்கு ரசிகர்கள் வரும் தடையை நீக்கியுள்ளன. போட்டிகளை நேரில் கண்டு ரசிக்க ரசிகர்களுக்கு கதவுகளைத் திறந்தன. இந்த ஆண்டு கால்பந்து போட்டி, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியன் பிரீமியர் லீக், கபடி, ஆசிய கோப்பை, டென்னிஸ், என பல விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

அப்படியானால், 2022 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் எவை? என்பதைக் குறித்து ‘இயர் இன் தேடல் 2022’ (Year in Search 2022) பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 விளையாட்டு நிகழ்வுகள் எது என்று பார்த்தால், இந்தியன் பிரீமியர் லீக் தான் முதலிடத்தில் உள்ளது.

2022 ல் அதிகம் தேடப்பட்ட முதல் 10 விளையாட்டு நிகழ்வுகளின் பட்டியல்:

1) இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League)

2) ஃபிபா உலகக் கோப்பை (FIFA World Cup)

3) ஆசிய கோப்பை (Asia Cup)

4) ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup)


5) காமன் வெல்த் கேம்ஸ் (Commonwealth Games)

6) இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League)

7) புரோ கபடி லீக் (Pro Kabaddi League 2022)

8) ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை (ICC Women’s Cricket World Cup)

9) ஆஸ்திரேலிய ஓபன் (Australian Open)

10) விம்பிள்டன் (Wimbledon)

Recent News