Tuesday, December 24, 2024
HomeLatest Newsவிண்வெளியில் விளைந்த தக்காளி- நாசாவின் புதிய முயற்சி..!

விண்வெளியில் விளைந்த தக்காளி- நாசாவின் புதிய முயற்சி..!

விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி தனி விண்கலம் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

விண்வெளியை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அதிசயம் ஒன்றை நடத்தியுள்ளது நாசா. விண்வெளியில் மனிதன் நடமாடவே தீவிர முயற்சி எடுக்க வேண்டிய சூழலில் , அங்கு தக்காளியை விளைவித்து காட்டியுள்ளனர்.

இதற்காக நிலவில் இருந்து மண் எடுக்கப்பட்டுள்ளதுடன், விண்வெளியின் சீதொஷ்ண நிலைக்கு ஏற்ப பதப்படுத்தப்பட்டு பூமியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு விதைக்கப்பட்ட குறித்த விதை தக்காளி விதைக்கப்பட்டு முளைத்த செடியில் சரியாக 104 நாட்களின் பின் தக்காளி விளைந்துள்ளது.

அத்துடன் தக்காளி பறிக்கப்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விண்கலமூடாக பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள நாசாவிற்கு சொந்தமான ஸ்பேஸ் சென்டரலில் அந்த தக்காளி பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இது, ஒரு முதல் முயற்சி என்றும், இதில் வெற்றி பெற்றால் பெரிய அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை விண்வெளியில் விளைவிக்க முடியும் தோட்ட வேலைகளில் ஈடுபடுவது மனதை இலகுவாக்கும் என்பதால் விண்வெளி மையத்தில் வீரர்கள் இது போன்ற தோட்ட வேலைகளில் ஈடுபடும் போது, மனதிற்கு இதமாகவும், மன அழுத்தம் குறையும் என்றும் நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வாறாக விண்வெளி தோட்டம் வெற்றியளித்தால் சாலட் தயாரிக்கப் பயன்படும் இலகு ரக காய்கறிகளை விளைவித்து வீரர்களே சாலட் செய்து சாப்பிடலாம் எனவும் நாசா கூறியுள்ளது.

Recent News