உலகலாவிய ரீதியில் ஆண்டுதோறும் பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நவம்பர் 1ம் திகதியான இன்று உலகம் முழுவதும் சைவ உணவு சாப்பிடுவோர் தினம் கொண்டாடப்படுகிறது.
முதன் முதலில் 1977ஆம் ஆண்டு வட அமெரிக்க சைவ சங்கம்தான் உலக சைவ உணவு சாப்பிடுவோர் தினத்தை நிறுவியது.
சைவ உணவின் முக்கியத்துவம், அதன் அவசியம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
பின் 1978-இல் உலக சைவ சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சிறப்புச் சத்துக்கள் கொண்ட உணவை சைவம் என்று சொல்லலாம்.
இவ்வாறாக உலக சைவ உணவு தினமாகிய இன்று மாமிச உணவுகளைத் தவிர்த்து சைவ உணவினை மட்டும் உண்டு இன்றைய தினத்தினை நினைவுகூறுவோம்.