இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய கடற்படைகளை உள்ளடக்கிய மலபார் பயிற்சி ஆகஸ்ட் 11 முதல் 21 வரை சிட்னியில் நடைபெற உள்ளது.
சீனாவின் இராணுவ உறுதிப்பாடு குறித்த வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த வருடாந்திர போர்பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால் மறுபுறம் இந்த பயிற்சியை பிராந்தியத்தில் தனது செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக சீனா கருதுகிறது.
குவாட் நாடுகள் சுதந்திரமான, திறந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பகுதியை உறுதி செய்வதற்காக செயல்பட்டு வருகின்றன. அதனை வெளிக்காட்டும் விதமாக இந்த பயிற்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.