Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsநியூயார்க்கில் 'டிக்டாக்' செயலியை உபயோகிக்க தடை…!!!

நியூயார்க்கில் ‘டிக்டாக்’ செயலியை உபயோகிக்க தடை…!!!

இந்தியாவில் அதிகளவானோர் பயன்படுத்தி வந்த டிக்டாக் செயலியை கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய அரசு தடை செய்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் சீனாவிற்கு சொந்தமான இந்த செயலியை தடை செய்தன.

இந்நிலையில் நியூயார்க் நகர அரசு, ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு ஏற்கனவே சாதனங்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் 30 நாட்களுக்குள் அதனை நீக்கிவிட வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளது.

நியூயார்க் சைபர் கிரைம் போலீஸ் தரப்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “டிக்டாக், நகரின் தொழில்நுட்ப நெட்வொர்க்குகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்து உள்ளார்.

Recent News