நேபாளத்தில் சென்ட்ரல் உயிரியல் பூங்காவிலுள்ள ஆறு புலிகள் வாரந்தோறும் சனிக்கிழமையன்று உண்ணாவிரதம் இருக்க வைக்கப்படுகின்றன.
புலிகளின் அதிக உடல் எடை காரமாரணமாக அவற்றின் ஆரோக்கியத்தைக் காப்பதற்காக பூங்கா நிர்வாகம் இந் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை அவற்றின் ஆரோ்கயத்தைக் கருத்திலெடுத்து தினசரி உணவும் குறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண் புலிக்கு ஐந்து கிலோ உணவும் ஆண் புலிக்கு ஆறு கிலோ உணவும் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஆண்புலிகளின் அதிகரித்த எடையால் தற்போது அவைகளுக்கு ஐந்து கிலோ உணவே வழங்கப்படுகின்றது.
புலிகள் இயற்கையான வாழும் போது அதிக தூரம் நடக்க வேண்டியிருக்கும் அதனால் அவற்றின் உடலில் கொழுப்பு சேர வாய்ப்பில்லை. மாறாக மிருகக்காட்சிச் சாலையில் குறைந்த நேரமே நடப்பதால் அதிக கொழுப்பு சேர வழி வகுப்பதுடன் உடல் நலப் பிரச்சினையும் ஏற்படும் வாய்ப்புள்ளது.
புலி போன்ற மாமிசமுண்ணும் பிராணிகளே இவ்வாறு அவற்றின் ஆரோக்கியம் கருதி பட்டினி போடப்படுகின்றனவே தவிர பணப் பற்றாக்குறையால் பட்டினி போடப்படவில்லை.
புலிகளை மருத்துவ சோதனைக்குட்படுத்தும் போது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்து அவை எடை அதிகரித்துள்ளதை அடையாளப்படுத்தும். எனவே தான் குறித்த விலங்கியல் பூங்காவிலுள்ள ஆறு புலிகளும் சனிக்கிழமை தோறும் விரதமிருக்க வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.