Tuesday, January 21, 2025
HomeLatest News‘துணிவு’ முழு படமும் ஓடிடியில்....வெளியானது சூப்பர் தகவல்

‘துணிவு’ முழு படமும் ஓடிடியில்….வெளியானது சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான அஜித்,எச்.வினோத் இயக்கத்தில்,  ‘துணிவு’ ஜனவரி 11 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார்.படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் சூப்பரா கலக்கி வருகிறது. 

தற்போது  3-ம் நாள் முடிவில் ரூ.100 கோடி கிட்ட நெருங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், துணிவு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வரலாம் என்று மஞ்சு வாரியர் கூறியுள்ளார். மேலும், இப்படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்காக சில காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்றும் ஒருவேளை படத்தின் முழு வெர்ஷனும் ஓடிடி ரிலீஸாகலாம் என்றும் மேலும்  அவர் தெரிவித்துள்ளார்.

அந்த  வகையில், துணிவு ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதால், இதில் நீக்கப்பட்ட காட்சிகள் பிரத்யேகமாக வர வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.

Recent News