Friday, January 24, 2025
HomeLatest Newsஉலகக் கிண்ண கால்பந்து தொடரில் இன்று மூன்று போட்டிகள்!

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இன்று மூன்று போட்டிகள்!

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் கீழ் 06 அணிகளுக்கு இடையிலான மேலும் மூன்று ஆட்டங்கள் இன்று (28) நடைபெறவுள்ளன.

முதல் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு கேமரூன் மற்றும் சேர்பியா அணிகளுக்கு இடையே ஆரம்பமாகவுள்ளது.

இந்த அணிகள் “ஜீ” குழுவில் இருந்து போட்டிக்களத்தில் இறங்கவுள்ளன.

இதனையடுத்து “எச்” குழுவில் அங்கம் வகிக்கும் தென்கொரியா மற்றும் கானா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இரவு 9.30 அளவில் பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான பிறிதொரு போட்டியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News