Thursday, January 23, 2025
HomeLatest Newsஇந்த ராசிக்காரர்களை கல்யாணம் பண்றவங்க ரொம்ப பாவம்!

இந்த ராசிக்காரர்களை கல்யாணம் பண்றவங்க ரொம்ப பாவம்!

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு வெற்றி மற்றும் தோல்விக்கும் அவர்களின் ராசி முக்கிய பங்கு வைப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த இந்த 5 ராசிக்காரங்க திருமணத்திற்கு பிறகு தகாத உறவுடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை நாம்
இங்கே பார்க்கலாம்.

திருமணம் என்பது இரண்டு வெவ்வேறு குணம் உள்ள ஒருவர் காலம் முழுவதும் ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ்வதுதான். ஆனால், திருமண வாழ்க்கை அமைவருக்கு பிடித்தமாதிரி இன்பமாக அமைந்துவிடாது. திருமணம் ஆனால் ஆரம்பத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருப்பார்கள். நாட்கள் செல்ல செல்ல, அன்பு குறையும், கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.

தனக்கு தேவையான அன்பு நமக்கு கிடைக்காத போது, தாம்பத்திய வாழ்க்கை தனக்கு பிடித்த மாதரி அமையாத போது அவர்கள் வேறு ஒரு காதலையே அல்லது அன்பையோ தேடி செல்வார்கள். ஜோதிட சாஸ்திரப்படி, திருமணத்திற்குப் பிறகும் சிலர் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை தேடி செல்கிறார்கள் என கூறப்படுகிறது. அப்படி, தகாத உறவை தேடி செல்லும் ராசிக்காரர்கள் யார் என பார்க்கலாம்.

​திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு

காதலித்தோ அல்லது வீட்டில் உள்ளவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்க்கையில் வெறுப்பு அடையும் போது, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சிலர் வேறு காதலை தேடி செல்வார்கள். ஏனென்றால், அவர்களுக்கு தற்போது இருக்கும் திருமண வாழ்க்கையில் ஆர்வம் குறைவு அல்லது போதிய திருப்தி இல்லாத காரணமாக கூட இருக்கலாம்.

தனக்கு பிடித்த அல்லது தனக்கான ஒருவரிடம் இருந்து நாம் எதிர்பார்க்கும் அன்பு நமக்கு கிடைக்காத போது அதை சரி செய்யாமல், வேறு ஒருவரின் அன்பை தேடி செல்கின்றனர். சிலர், தனக்கு இந்த வாழ்க்கை ஒத்துவராது என தெரிந்தால் அந்த வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக பிரிந்த பிறகு, வேறு துணையை தேடுவார்கள். ஆனால், சிலர் திருமண உறவில் இருக்கும் போதே தகாத உறவை தேடி செல்வார்கள். அப்படி தகாத உறவை தேடி செல்லும் குணத்திற்கும் ராசிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. ஏனென்றால், சில ராசிகளுக்கு திருமணத்திற்கு பிறகும் காதல் மீது உள்ள நாட்டம் குறையாமல் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் பற்றி இங்கே காணலாம்.

​மேஷம்

செவ்வாய் ஆளும் நெருப்பு ராசியான மேஷம், வேகமும், மற்றவர்களை கட்டுப்படுத்தும் குணம் உள்ளவர்கள். இவர்கள், தங்களுக்கு சரியான மற்றும் ஏற்ற ஒரு உறவை தேர்வு செய்ய மிகவும் கஷ்டப்படுபவர்கள். திருமணமான மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் காதலை அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள், தனக்கு பிடித்த விஷயங்களை செய்ய ஒருபோதும் தயங்குவதில்லை. அது வேலையாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. எனவே, திருமணத்திற்கு பின்னரும், அதற்கு அப்பாற்பட்ட உறவை அவர்கள் தேடி செல்ல அவர்கள் யோசிப்பதில்லை.

​கடகம்

சந்திரன் ஆளும் நீர் ராசியான கடக ராசிக்காரர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள் மற்றும் அதீத இறக்க குணம் உள்ளவர்கள். தனது காதல் துணை அல்லது பிற உறவுகளுடன் எப்போதும் இணைந்து இருக்க ஆசைப்படுகிறார்கள். இவர்கள் திருமண வாழ்க்கையை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. தனது துணையிடம் செழிப்படையும் போது, அவர்கள் வேறு ஒரு அன்பை தேடி பயணிப்பார்கள்.

அதுமட்டும் அல்ல, அவர்களுடன் எளிதில் காதல் வயப்படுவார்கள். தனது அடக்க முடியாத கோவத்தால், மற்றவர்களை வெறுப்பேத்தவும் சில சமயங்களில் திருமணத்திற்கு பிறகு தகாத உறவை தேடி செல்வார்கள்.

​சிம்மம்

சூரியன் ஆளும் நெருப்பு ராசியான சிம்ம ராசிக்காரர்கள், அறிவுக்கும் புகழுக்கும் சொந்த காரர்கள். அவர்கள், வலி மற்றும் பாதிப்பிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள உடனே இன்னொரு உறவை தேடி செல்லும் குணம் உள்ளவர்கள். தனக்கு ஒரு இடத்தில் நிம்மதி இல்லை, இன்று எனக்கு மனது சரி இல்லை என்றால், அதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

இந்த குணம் திருமண வாழ்க்கையில் மோசமான நிலையை ஏற்படுத்தும். திருமணம் ஆனாலும், இன்னொருவருடன் தகாத உறவில் இவர்களுக்கு வேடிக்கையாக உள்ளது. ஏனென்றால், இவர்கள் ஒருவர் போனால் இன்னொருவர் தனக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்.

​மகரம்

சனி பகவான் ஆளும் பூமி ராசியான மகர ராசிக்காரர்கள், இயல்பாகவே நம்பிக்கைக்கு புறம்பானவர்கள். இது, இவர்களின் சுயமரியாதையை குறைக்கிறது. மேலும், தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் உலகிற்கு இவர்கள் தவறாக நிரூபிக்கிறார்கள். தனக்கு விருப்பமான காரியங்கள் பலனளிக்காதபோது, தங்கள் திருமணத்தில் ஏமாற்றமடைந்து வேறு காதலை தேடுகிறார்கள். தனது சுயநலத்திற்காக தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ நினைப்பவர்கள். ஆகவே, திருமணம் ஆகியிருந்தாலும் மற்றொரு உறவுடன் இருப்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று.

கும்பம்

சனி பகவான் ஆளும் காற்று ராசியான கும்பம், காற்றை போல அனைவருக்கும் இதமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்பை செலுத்துபவர்கள். எனவே, இவர்களை விரும்புபவர்களை இவர்கள் வெறுப்பதில்லை. அனைவருக்கும் நல்லவனாகவே இருக்கலாமா என்ற எண்ணத்தை உடையவர்கள். எனவே, இவர்கள் தன்னை காதலிப்பவர்களை திரும்ப காதலிக்கும் குணம் கொண்டவர்கள். உதவும் குணம் அதிகமாக உள்ளவர்கள்.

​மீனம்

குரு ஆளும் நீர் ராசியான மீன ராசிக்காரர்கள், மற்றவர்கள் தனக்கு பிடித்தார் போலவும், உடல்ரீதியான வன்முறையை விரும்புபவர்கள். அதாவது, ஒரு நீர் அடையாளத்துடனான சண்டை உங்களை வெறும் காயங்களுடன் விட்டுவிடாது, உங்கள் உள் ஆன்மாவை காயப்படுத்தும் வார்த்தைகளால் வசைப்பாடுபவர்கள். மேலும் இவர்கள், தங்கள் கூட்டாளிகளை பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை.

மற்றவர்களின் சுகந்திரத்தை பறிக்கக்கூடியவர்கள். தங்கள் துணை தங்களை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்குபவர்கள். என்னதான் காதல் வாழ்க்கை இருந்தாலும், தனக்கு இணங்கக்கூடிய ஒரு உறவை தேடி செல்வதில் ஆர்வம் உள்ளவர்கள்.

Recent News