Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஇது பண்டாக்கரடி இல்லை!நாய்களுக்கு வர்ணம் பூசி ஏமாற்றிய பூங்கா!

இது பண்டாக்கரடி இல்லை!நாய்களுக்கு வர்ணம் பூசி ஏமாற்றிய பூங்கா!

சீனாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் சௌ சௌ இன நாய்க்கு கருப்பு வெள்ளை பெயிண்ட் அடித்து பாண்டா கரடிபோல மாற்றியுள்ளனர்.இந்த சௌ சௌ இன நாயை பாண்டா கரடியினை என நினைத்து தினமும் ஏராளமானோர் ஏராளமானோர் காணக் குவிந்துள்ளனர்.

இது தொடர்பில் தைசௌ எனப்படும் அந்த உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவிக்கையில், “எங்கள் பூங்காவில் பாண்டா இல்லாததால் இப்படி செய்தோம் எனவும், நாம் முடிக்கு டை அடிப்பதுபோல்தான் இதுவும். இதனால் நாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை’ என பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு சீனாவில் உள்ள ஹாங்சோ உயிரியல் பூங்காவில் ஏஞ்சலா என்ற பெயர்கொண்ட மலேசிய சூரிய கரடி பார்ப்பதற்கு மனிதனை போல தோற்றமளித்ததால் பார்வையாளர்கள் அதை கரடி வேஷம் போட்ட மனிதன் என்று தவறாக புரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News