Wednesday, December 25, 2024
HomeLatest Newsஉலகப் புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பைபருக்கு ஏற்பட்ட நிலை

உலகப் புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பைபருக்கு ஏற்பட்ட நிலை

உலகப் புகழ் பொப் இசைப் பாடகர் ‘ஜஸ்டின் பைபரின்’ வருடாந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் வாரத்தில் பிரேசிலில் நடைபெறவிருந்த போதும் அண்மையில் இவருக்கு ஏற்பட்ட “ராம்சே ஹண்ட் சிம்ரம்ஸ்” எனப்படும் நோயினால் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோய் இவரின் வலது பக்க தாடையை தாக்கியுள்ளதாகவும் இதனால் இவரின் குரல்வளை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாயின் ஒரு பக்கம் முற்றாக செயலிழந்த நிலையில் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெறும் 28 வயதான ‘ஜஸ்டின் பைபர்’ உலகப் புகழ் பெற்ற பொப் இசை பாடகர் என்பதுடன் பல கோடி ரசிகர்களைக் கொண்டிருக்கின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News