Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉலகின் குள்ளமான மனிதர் இவர்தான்! - கின்னஸ் சாதனை

உலகின் குள்ளமான மனிதர் இவர்தான்! – கின்னஸ் சாதனை

உலகின் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர்.

உலகில் வாழும் மனிதர்களில் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள Afshin Esmaeil Ghaderzadeh (20), ஈரானிலுள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர்.

அவரது உயரம் 2அடி ஒரு அங்குலம், அதாவது 65.24 சென்றிமீற்றர்கள்.

இதற்கு முன் உலகின் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த கொலம்பியாவைச் சேர்ந்த Edward ‘Niño’ Hernandez (36) என்னும் நபரைவிட Afshin 7 சென்றிமீற்றர் உயரம் குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் பெற்றோருக்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதுதான் Afshinஉடைய ஆசையாம். தான் உலகின் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விடயத்தால் தனக்குக் கிடைக்க இருக்கும் புகழ், தனது குடும்பத்துக்கு உதவ தனக்கு உதவியாக இருக்கும் என்கிறார் அவர்.

காரணம், Afshinக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. சில நேரங்களில் அவரது சிகிச்சைக்கு செலவு செய்வதற்கு பணம் இல்லாமல் அவரது பெற்றோர் கஷ்டப்படுகிறார்கள்.

20 வயதாகும் Afshinக்கு ஒரு மொபைல் போனை சுமப்பதுகூட கஷ்டம்தான் என்றாலும் அவரால் தானாகவே நடமாட முடியும். என்றாலும், எங்கு சென்றாலும் அவரது பெற்றோர்களில் ஒருவர் அவரை தூக்கிக்கொண்டுதான் நடக்கிறார். எத்தனை வயதானாலும் பெற்றோருக்குப் பிள்ளைதானே! 

Recent News