Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇலங்கையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிவதற்கான குறைந்தபட்ச தகுதி இதுதான்!

இலங்கையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிவதற்கான குறைந்தபட்ச தகுதி இதுதான்!

விமான பணிப்பெண்களாக ஆட்சேர்ப்பு செய்யும் போது தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விமான பணிப்பெண்ணாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு திருமணமாகாமல் இருப்பதே குறைந்தபட்ச தகுதியாகும்.

தற்போது சேவையில் இருக்கும் விமான பணிப்பெண்களுக்கு இது பொருந்தாது. திருமணமானதை மறைத்து சேவையில் ஈடுபடுபவர்கள் குறித்து நிறுவனம் அறிந்திருக்கவில்லை.

தவறான தகவலை வழங்கிய விண்ணப்பதாரரும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

அவ்வாறு ஏற்படின் அதற்கேற்ப தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

Recent News