குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சிறந்த வயதைக் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள செம்மல்வீஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதனை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த வகையில், ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கான பாதுகாப்பான வயது 23 மற்றும் 32 ற்கு இடையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், அந்த வயதில் சில பிறப்பு குறைபாடுகளின் ஆபத்து குறைவாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
அவர்களின் கண்டுபிடிப்புகளின் படி, தாய்வழி வயது மற்றும் மரபணு அல்லாத பிறப்பு குறைபாடுகள் மற்றும் அவற்றின் விளைவுகளுக்கு இடையேயான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளன.
இது குறித்து செம்மல்வீஸ் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் டாக்டர் போக்லர்கா பெத்தோ, முதலில் இவ்வாறான பிறப்பு குறைபாடுகள் ஏற்பட்ட பத்து வருட வயது வரம்பை தீர்மானிக்க முயற்சித்ததாகவும் அதன் போதே குழந்தைப்பேறுக்கான சிறந்த வயது 23 முதல் 32 ரகுல் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறந்த குழந்தை பிறக்கும் வயதை ஒப்பிடும் போது 22 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் குரோமோசோமால் அல்லாத அசாதாரணங்களை உருவாக்கும் ஆபத்து பொதுவாக 20 சதவிகிதமும், 32 வயதிற்கு மேல் 15 சதவிகிதமும் அதிகரித்துள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதற்காக குரோமோசோமால் அல்லாத வளர்ச்சிக் கோளாறுகளால் சிக்கலான 31,128 கர்ப்பங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளார். 1980 முதல் 2009 வரையிலான பிறவி அசாதாரணங்கள் பற்றிய தரவும் இதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது.
இளம் தாய்மார்களை மட்டுமே பாதிக்கும் முரண்பாடுகளில் கருவின் மைய நரம்பு மண்டல குறைபாடுகள் மிக முக்கியம் என்றும் 22 வயதிற்குட்பட்டவர்களில், அவற்றை உருவாக்கும் ஆபத்து பொதுவாக 25 சதவிகிதம் அதிகரிப்பதாகவும், 20 வயதுக்குட்பட்டவர்களில் இந்த அதிகரிப்பு இன்னும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வயதான தாய்மார்களின் கருக்களை மட்டுமே பாதிக்கும் அசாதாரணங்கள் தலை, கழுத்து, காதுகள் மற்றும் கண்களின் பிறவி குறைபாடுகளின் அபாயத்தை இரட்டிப்பாக்கியதாகவும் அது 40 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பங்களில் மிகவும் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.