Friday, January 17, 2025
HomeLatest Newsஇது அமெரிக்காவினுடைய போர்! இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு.

இது அமெரிக்காவினுடைய போர்! இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டினுடன் இணைந்து கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

இது எங்களுடைய போர் மட்டுமின்றி பல வழிகளில் உங்களுடைய போரும் கூட என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஒக்டோபர் 7 ந் திக்தி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. பெண்கள் முதியவர்கள் என பலரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது. 200-க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது.

அப்போது இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்காக தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து அவர் கூறும்போது காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான நாகரீகத்தின் போரை நாங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம்.

நாங்கள் எப்போது பேசுகிறோமோ அப்போது ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றியை பெற வேண்டும் என்ற எங்களுடைய ஈடுபாட்டை நான் மீண்டும் வெளிப்படுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இது எங்களுடைய போர் மட்டுமின்றி பல வழிகளில் உங்களுடைய போரும் கூட என நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில் உலகில் நாகரீகத்தின் சக்தியை நீங்கள் வழிநடத்தி செல்கிறீர்கள் என்று அமெரிக்காவை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Recent News