Monday, December 23, 2024
HomeLatest Newsஇது ஒரு சவாலான நேரம்! – இலங்கை குறித்து அமெரிக்க தூதுவர் வெளியிட்ட தகவல்

இது ஒரு சவாலான நேரம்! – இலங்கை குறித்து அமெரிக்க தூதுவர் வெளியிட்ட தகவல்

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், ஆசியாவுக்கான பிரதி உதவித் திறைசேரிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலாளரான தூதுவர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடினர்.

Recent News