Thursday, January 23, 2025
HomeLatest Newsபேச்சுவார்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை; தொடர்ந்து ஏமாற்றும் ரணில்! நிபந்தனைகள் நிராகரிப்பா?

பேச்சுவார்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை; தொடர்ந்து ஏமாற்றும் ரணில்! நிபந்தனைகள் நிராகரிப்பா?

அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள அதிகாரங்களை விரைவாக பகிர்வு செய்கின்ற விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ஜனாதிபதியுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

குறிப்பாக நில அபகரிப்பு தொடர்பாக எந்தவித முன்னேற்றமான கருத்துக்களையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.

மாறாக யாழிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது அந்த விடயங்ளை ஆராய்வதாக ரணில் தெரிவித்திருந்ததாக சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அறிவிப்புக்களை பின்னர் தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

ஒருவார காலத்திற்குள் இந்த பேச்சுவார்த்தை தொடர்பான சாதகமான கருத்துகளை ரணில் தெரிவிப்பாராயின் அடுத்த பேச்சுவார்த்தைக்கான திகதியினை தாம் அறிவிப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News