Wednesday, December 25, 2024
HomeLatest Newsசீன ஆய்வகத்தில் கொரோனா உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை..!அமெரிக்க உளவுத்துறை தகவல்..!

சீன ஆய்வகத்தில் கொரோனா உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை..!அமெரிக்க உளவுத்துறை தகவல்..!

சீனாவின் ஆராய்ச்சி மையத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்நாட்டின் வூஹான் ஆராய்ச்சி மையத்தில் பயோ வெப்பனாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், அதனை உருவாக்கிய விஞ்ஞானிகளில் 3 பேருக்கு வைரஸ் பரவியதாகவும் தகவல்கள் வெளியாகியது.

அதனால், அது குறித்த உண்மை தன்மையை கண்டறிவதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் அமெரிக்காவின் உளவுத்துறை வலியுறுத்தியது.

அதையடுத்து, அந்த முயற்சியில் அமெரிக்காவின் உளவுத்துறை ஈடுபட்டது.

இந்நிலையில், அந்த விசாரணையில் சீன ஆராய்ச்சி மையத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிய வந்துள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

அது மட்டுமன்றி, சீன ஆய்வகத்தில் விஞ்ஞானிகளுக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் காணப்பட்ட போதிலும், அவர்கள் அந்த வைரசை உருவாக்கினார்களா? அல்லது இல்லையா? என்பது குறித்து உறுதியாக கூறமுடியவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வுஹான் ஆய்வகம், “பொது சுகாதாரத் தேவைகளுக்காக” மக்கள் விடுதலை இராணுவத்துடன் (பிஎல்ஏ) இணைந்து நோய்க்கிருமி ஆராய்ச்சி மற்றும் தடுப்பூசி உருவாக்கம் செய்ததாக அறிக்கை கூறியது.

மேலும், வுஹான் ஆய்வகம், பொது சுகாதாரத் தேவைகளுக்காக மக்கள் விடுதலை இராணுவத்துடன் (பிஎல்ஏ) இணைந்து நோய்க்கிருமி ஆராய்ச்சி மற்றும் தடுப்பூசி உருவாக்கம் செய்ததாகவும் அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News