Tuesday, April 29, 2025
HomeLatest NewsWorld Newsஅழகு நிலையங்களை மூடுவதில் மாற்றமில்லை -தலிபான்கள் உறுதி..!

அழகு நிலையங்களை மூடுவதில் மாற்றமில்லை -தலிபான்கள் உறுதி..!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களை மூடுவதற்கு தாங்கள் விதித்துள்ள ஒரு மாதக் கெடு முடிவடைந்துவிட்டதால் அவை அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று தலிபான்கள் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாக கூறினா்.

அழகு நிலையங்களில் புருவங்களைத் திருத்துதல், பெண்களின் கூந்தலை நீளமாகக் காட்டுவதற்கு சவுரி முடியைப் பயன்படுத்துவது, தொழுகையின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் அதற்கு முன்னதாக முக அலங்காரம் செய்வது போன்ற சேவைகள் வழங்கப்படுதால் அவை மூடப்பட வேண்டும் என்று தலிபான்கள் கடந்த மாதம் அறிவித்திருந்தனா்.

இதற்கு சா்வதேச அளவிலும், உள்நாட்டிலும் எதிா்ப்பு எழுந்துள்ள நிலையிலும், தங்களது முடிவில் உறுதியாக இருப்பதாக தலிபான்கள் தற்போது அறிவித்துள்ளனா்.

Recent News