Thursday, December 26, 2024
HomeLatest Newsபாராளுமன்றில் பறந்த ஊடகவியலாளரின் தேநீரால் பரபரப்பு!

பாராளுமன்றில் பறந்த ஊடகவியலாளரின் தேநீரால் பரபரப்பு!

ஊடகவியலாளர்களுக்கு பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பத்திரிக்கையாளர்களின் தேநீருக்கு ரூ.25 வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தொகை ரூ.100 ஆக உயர்த்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் உணவு, தேநீர் மற்றும் சகல வசதிகளுக்காக சுமார் ஆயிரம் ரூபா அறவிடப்படும் வேளையில் ஊடகவியலாளர்களின் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊடகவியலாளர்களின் மதிய உணவின் விலையும் கடந்த மாதத்திலிருந்து நூற்றைம்பது ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News