Thursday, December 26, 2024
HomeLatest Newsஇலங்கையில் மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு..!

இலங்கையில் மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு..!

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு மீண்டும் பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஏதுநிலை உருவாகியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் வீரசூரிய இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் ஆவணங்களை கையளிக்காமை, கடன்சான்று பத்திரங்களை தாமதப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக, பால் மா அடங்கிய 15 கொள்கலன்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பயனாளர்களுக்கு தேவையான பால்மாவினை ஒரே தடவையில் இறக்குமதி செய்து வழங்குவதில் சிக்கல் நிலை உள்ளதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

Recent News